பனிப்பிரதேசமான அலாஸ்காவில் அதிக பட்ச வெப்பநிலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
அலாஸ்காவின் மிகப்பெரிய நகரமான ஆங்கரேஜ் விமான நிலையத்தில், முதல் முறையாக வெப்பநிலை 90 டிகிரி பாரன்ஹீட்டை எட்டியதாக, அமெரிக்க தேசிய வானிலை அமைப்பு அறிவித்துள்ளது.
அலாஸ்காவில் 1969ம் ஆண்டு, 85 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானதே இதுவரை அதிகபட்சமாக இருந்தது. அதனை தற்போதைய வெப்பநிலை மிஞ்சியுள்ளது.
பனிப்பிரதேசமான அலாஸ்காவில், கடந்த சில வருடங்களாகவே உயர்ந்து வரும் வெப்பநிலையால், ஆர்க்டிக் கடல்பகுதியின் வெப்பம் உயர்ந்தும், பனிமுகடுகள் உருகியும் வருகின்றன. மேலும் வெப்ப அலைகள் வீசி வருவதால் பொதுமக்களும், வனவிலங்குகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment