தைவானில் நடந்த உலக அளவிலான இறகு பந்து போட்டியில் இந்திய அணி சார்பில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் பெற்ற மாணவிக்கு நடிகர் விஜய்சேதுபதி பாராட்டு தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் சங்க தமிழன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தைவானில் நடந்த காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கான இறகு பந்து போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொண்டு தங்கம் வென்ற மதுரை ஒளவை அரசு பள்ளி மாணவியான ஜெர்லின் காரைக்குடியில் வைத்து விஜய் சேதுபதியை சந்தித்தார்.
அப்போது அவருக்கு பூங்கொத்து கொடுத்து விஜய் சேதுபதி வாழ்த்தினார். அரசு பள்ளியில் படிக்கும் மாணவி இந்தியாவுக்காக தங்க பதக்கம் வென்றது பாராட்டத்தக்கது எனவும் அவர் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment