தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மருந்துக்கு கட்டுப்படாத மலேரியா காய்ச்சல் பரவுவதாக மருத்துவ ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதை தொடர்ந்து 1823ம் ஆண்டு முதல் இங்கிலாந்திலிருந்து வாரந்தோறும் வெளியாகும் தி லேண்ட் செட் என்ற மருத்துவ இதழில் இது குறித்து வெளியான கட்டுரையில் தாய்லாந்து, கம்போடியா, லாவோஸ், வியட்நாம் உள்ளிட்ட 13 தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மலேரியா வேகமாக பரவப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து வழக்கமாக மலேரியா காய்ச்சலை கட்டுப்படுத்த வழங்கப்படும் டை ஹைட்ரோ ஹார்டுமிசினின் பைத்தராகியுன் என்ற மருந்துக்கு இப்போது நோய் கட்டுப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இதை தொடர்ந்து மலேரியா காய்ச்சலில் பாதிக்கப்பட்டவர்களில் கம்போடியாவின் மேற்கு மாநிலங்களின் 62 சதவிகிதம் பேரும் வடகிழக்கு மாநிலங்களில் 27 சதவிகிதம் பேரும்.
மேலும் வியட்நாமில் 53 சதவிகிதம் பேரும் தாய்லாந்தில் 87 சதவிகித பேரும் இந்த மருந்தால் குணப்படுத்த முடியாத நிலையில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் இதை அடுத்து அனாஃபிலிஸ் வகை கொசுக்கள் கடிப்பதன் மூலம் பரவும் மலேரியா நோய் இப்போது மருந்துக்கு கட்டுப்படாத நிலையை அடைந்துள்ளதால் மாற்று மருந்தை உடனடியாக கண்டறிய வேண்டும் என்றும் இல்லாவிட்டால் உலக நாடுகள் முழுவதிலும் மலேரியா காய்ச்சல் நோய் உருவாவதை தடுக்க முடியாத நிலை உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் அல்ஜிரியாவும் அர்ஜென்டினாவும் உலகிலேயே முற்றிலுமாக மலேரியாவை ஒழித்த நாடுகள் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment