கட்டாய விடுமுறையிலுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவும் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று முன்னிலையாகுமாறு பூஜித் ஜயசுந்தரவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே அவர் சுகயீனம் காரணமாக நாராஹென்பிட்ட பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவும் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக இன்று அழைக்கப்பட்டிருந்த நிலையில், அவரும் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment