2009ல் விஜய்யுடன் 'வில்லு' படத்தில் ஜோடி சேர்ந்த நயன்தாரா, பத்து ஆண்டுகளுக்குப் பிறகு 'பிகில்' படத்தில் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளார். இப்படத்தில் இளம் மற்றும் நடுத்தரம் என விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். இளம் விஜய் ஜோடியாக நயன்தாரா நடிப்பதாகச் சொல்லப்படுகிறது.
நயன்தாரா பிசியோதெரபி படிக்கும் கல்லூரி மாணவியாக நடிக்கிறாராம். விஜய் கால்பந்தாட்ட வீரர் என்பதால், நயன்தாரா கதாபாத்திரத்தை பிசியோதெரபி மாணவியாக அமைத்துள்ளார்களாம். நயன்தாராவிற்கு 30 வயதிற்கு மேல் ஆகிறது. இந்த வயதில் அவர் கல்லூரி மாணவியாக நடிப்பது ஆச்சரியம் தான். அதற்காக அவர் சற்றே இளைத்துள்ளார் என்றும் சொல்கிறார்கள். நடுவில் படப்பிடிப்புக்கு இடைவெளிவிட்டு தன் காதலருடன் அயல்நாட்டிற்கு சுற்றுப் பயணம் சென்ற நயன்தாரா, தற்போது மீண்டும் 'பிகில்' படப்பிடிப்பில் இணைந்துள்ளாராம்.
வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ளது 'பிகில்'.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment