நிலவுக்கு அடுத்த முறை நாசா அனுப்ப உள்ள வீரர்கள், அங்கேயே தங்கி ஆராய்ச்சிகள் செய்ய உள்ளனர். அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி ஆய்வு மையம், நிலவை ஆராய்ச்சி செய்வதில் முன்னுரிமை கொடுத்து வருகிறது.
இந்நாடு கடந்த கடந்த 1969ம் ஆண்டில் அனுப்பிய அப்போலோ -11 விண்கலத்தில் சென்ற வீரர்கள், நிலவில் ஜூலை 20ம் தேதி கால் தடம் பதித்தது உலக வரலாற்றில் மிகப்பெரிய சாதனையாக கருதப்பட்டு வருகிறது. இந்த அதிசயத்தின் 50ம் ஆண்டை அமெரிக்கா கோலாகலமாக கொண்டாடி வருகிறது.
இந்நிலையில், நிலவுக்கு மீண்டும் விண்வெளி வீரர்களை அனுப்புவதற்கான முயற்சிகளை நாசா தற்போது செய்து வருகிறது. இம்முறை விண்வெளி வீரர்களை அங்கேயே தங்க வைத்து பல்வேறு ஆராய்ச்சிகளை செய்ய திட்டமிட்டுள்ளது.
இது குறித்து நாசா இன்ஜினியரான லிண்டசே அட்சீசன் என்பவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘நாங்கள் நிலவுக்கு போகிறோம். இம்முறை அங்கேயே தங்குவோம்,’ என கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment