வடக்கில் யுத்தம் நடைபெற்ற காலத்தில் உயிருக்குப் பயந்து கொழும்பிலுள்ள குளிரூட்டப்பட்ட அறைகளில் காலத்தைக் கடத்தியவர்கள் இன்று வடக்கில் சென்று “கார்ட்போர்ட்” வீரர்கள் போன்று செயற்பட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க் கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது யார் என்பதைக் கூட இந்த மக்கள் மறந்துள்ளனர். இந்த கார்ட்போர்ட் வீரர்கள் வடக்கு மக்களைக் காப்பாற்றியவர்கள் போன்று செயற்பட்டு வருகின்றனர். யார் என்ன சொன்னாலும், என்ன செய்தாலும் உண்மை நிலைமை எது என்பதை வடக்கு மாத்திரமல்ல, முழு நாடும் மிகவும் நன்றாகவே விளங்கி வைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தனது ஆட்சிக் காலத்தில்தான் வடக்கு மக்களுக்கு அதிக வசதி வாய்ப்புக்கள் செய்து கொடுக்கப்பட்டன. இந்த அரசாங்கம் வடக்கு இளைஞர்களுக்கு தொழில்வசதியையாவது வழங்கவில்லையெனவும் மஹிந்த ராஜபக்ஸ எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார்.
இன்றைய தேசிய ஊடகமொன்றுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment