இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹுவின் தேர்தல் பிரச்சாரத்தில் இந்திய பிரதமர் மோடியுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
கடந்த ஏப்ரல் 9-ம் தேதி நடந்த தேர்தலை அடுத்து பெஞ்சமின் நேதன்யாஹு மீண்டும் பிரதமரானார். ஆனால், கூட்டணி குழப்பத்தால் அந்நாட்டு நாடாளுமன்றம் கலைக்கப்படுகிறது.
வரும் செப்டம்பர் 17-ம் தேதி மீண்டும் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நேதன்யாஹுவின் பிரச்சாரத்தில் பிரதமர் மோடியுடன் அவர் நின்றுகொண்டிருப்பது போன்ற புகைப்படம் அடங்கிய பேனர் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதேபோல் அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புதின் உள்ளிட்ட தலைவர்களுடனான படங்களும் தேர்தல் பிரச்சாரத்தில் இடம்பெற்றுள்ளன.
சர்வதேச தலைவர்களுடன் இருக்கும் நட்பை வெளிப்படுத்தும் உத்தியாக, பெஞ்சமின் நேதன்யாஹு பிரச்சாரத்தில் இந்த பேனர்கள் பயன்படுத்தப்படுகின்றன.
நாட்டை பாதுகாப்பாக வழிநடத்து தனக்கு நிகரான தலைவர் இல்லை எனக் காட்டும் வகையிலும் பிரச்சாரத்தில் சர்வதேச தலைவர்களைப் பயன்படுத்தியிருக்கலாம் என சொல்லப்படுகிறது.
2017-ல் பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்தை அடுத்து 2018-ல் பெஞ்சமின் நேத்தன் யாஹு இந்தியா வந்திருந்தார். கடந்த தேர்தலுக்கு முன் அவர்பிரதமர் மோடியை சந்திக்கவிருந்த நிலையில், அது தள்ளிப் போனது.
இந்நிலையில், இஸ்ரேலில் நடைபெறவுள்ள தேர்தலுக்கு முன்னதாக செப்டம்பர் 9-ம் தேதி பெஞ்சமின் நேத்தன் யாஹு இந்தியா வரவுள்ளதாகக் கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment