தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறை மற்றும் காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக சட்டசபையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
தமிழகத்தில் மழை பொய்த்துவிட்டது, நிலத்தடி நீர் கீழே சென்றுவிட்டது; இருந்தபோதிலும் தமிழக அரசு மக்களுக்கு முடிந்தவரை தண்ணீர் விநியோகித்து வருகிறது. ஆனால் காவிரி பிரச்சினையில் கர்நாடகா அரசில் கூட்டணியாக உள்ள காங்கிரஸ் அழுத்தம் கொடுத்ததா?
கர்நாடகாவில் ராகுல் பேசும்போது மேகதாது அணை கட்டப்படும் என கூறினார். அவர் பேசியதற்கு இங்குள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தீர்களா? இவ்வாறு அவர் பேசினார்.இதையடுத்து பேசிய தமிழக காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் ராமசாமி, காவிரி நீரை கொண்டு வர வேண்டியது ஆளும் கட்சியின் பொறுப்பு என்றார். காவிரி விவகாரத்தில் எதிர்க்கட்சியை குற்றம்சாட்டுவது எப்படி சரியாகும்? எனவும் அவர் கேள்வி எழுப்பினார். குடிநீர் பற்றாக்குறை குறித்து பேசிய அமைச்சர் வேலுமணி, தமிழகத்தில் குடிநீர் பஞ்சம் இல்லை, பற்றாக்குறை தான் உள்ளது என்றார்.
0 comments:
Post a Comment