மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் தொடர்பில் அதுரலிய ரத்ன தேரரினால் மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகரிடம் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்கள சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கண்காணிப்பின் கீழ் நிதி மோசடி தொடர்பான விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இந்த பல்கலைக்கழகத்துக்கு சவுதி அரேபியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பொன்றினால் 100 மில்லியன் டொலர் நிதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தே அதுரலிய தேரர் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
0 comments:
Post a Comment