கடந்த 21 பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்களுக்கு நன்னடத்தை புனர்வாழ்வு முகாமில் வைத்து சீர்திருத்தப் பயிற்சி வழங்கப்படாமல் விடுதலை செய்தால், இன்னும் ஓரிரு மாதத்தில் மற்றுமொரு இடத்தில் குண்டு வெடிப்பதற்கு காணரமாக அமையும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட இளைஞர்களுக்கு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பிணை வழங்குவது தவிர்க்கப்பட வேண்டும் எனவும் தேரர் குறிப்பிட்டார்.
நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இதனைக் கூறினார்.
0 comments:
Post a Comment