ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தில் ரஜினி, மும்பை போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். நயன்தாரா, நிவேதாதாமஸ், யோகிபாபு உள்பட பல பாலிவுட் நடிகர்களும் நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி சம்பந்தப்பட்ட படங்கள் அவ்வப்போது கசிந்தன. இதனால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. இருப்பினும், நேற்று மும்பை கடற்கரையில் ரஜினி, காவல்துறை உடையணிந்து நடித்துள்ள போட்டோக்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.
இது தர்பார் படப்பிடிப்புக்குழுவிற்கு அதிர்ச்சியாக இருந்தாலும், அந்த போட்டோக்களில் ரஜினி இளவட்டமாக தோன்றுவதைப் பார்த்து அவரது ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியடைந்துள்ளனர்.
0 comments:
Post a Comment