பூரி ஜெகன்நாத் மீது ஜெய் ஆகாஷ் புகார்
தமிழில் ரோஜாவனம், ரோஜா கூட்டம் படங்களில் இரண்டாம் கதாநாயகனாக நடித்தவர் ஜெய் ஆகாஷ். அதன் பிறகு கடந்த 15 வருடங்களுக்கு மேலாக தெலுங்கு மற்றும் தமிழில் சின்ன சின்ன படங்களில் நடித்தும் தானே படங்களை இயக்கியும் தன்னை சினிமாவில் தக்க வைத்துக் கொள்ள முயற்சி செய்து வருகிறார் ஜெய் ஆகாஷ்.
இந்த நிலையில் சமீபத்தில் தெலுங்கில் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் ராம் நடித்த 'ஐஸ்மார்ட் சங்கர்' என்கிற படம் வெளியானது.. இந்த படத்தை சில தினங்களுக்கு முன்பு தியேட்டருக்கு சென்று பார்த்த ஜெய் ஆகாஷ் அந்த படத்தின் மையக்கரு மற்றும் திரைக்கதை ஆகியவை தான் தற்போது இயக்கி வரும் நான் யார் என்கிற படத்தில் கதையுடன் ஒத்துப் போவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தாராம்.
இதுகுறித்து பூரி ஜெகன்நாத்துக்கும் தயாரிப்பாளருக்கும் தக்க ஆதாரங்களுடன் கடிதம் எழுதியும் அவர்களிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.. இதனைத்தொடர்ந்து தென்னிந்திய பிலிம் சேம்பரில் புகார் அளித்துள்ளார் ஜெய் ஆகாஷ்
0 comments:
Post a Comment