எழில் இயக்கத்தில் 'ஜகஜால கில்லாடி', பிரபு சாலமன் இயக்கத்தில் 'காடன்' ஆகிய படங்கள் விஷ்ணு விஷாலின் நடிப்பில் தயாராகி வெளிவரக் காத்திருக்கிறது. தவிர, சஞ்சீவ் இயக்கத்தில் விஜய் சேதுபதி வசனத்தில் விக்ராந்த்துடன் நடிக்கும் படம் ஆகஸ்ட் மாதம் தொடங்கவிருக்கிறது.
லைக்கா தயாரிப்பில் இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் ஒரு படத்திலும், சி.வி.குமார் தயாரிப்பில் 'இன்று நேற்று நாளை 2' படத்திலும் ஒப்பந்தமாகி இருக்கிறார். இதைத் தொடர்ந்து, 'ஜீவி' இயக்குநரின் படத்தையும் தயாரித்து நடிக்கவுள்ளார், விஷ்ணு.
இவை தவிர, தெலுங்கில் நானி நடித்து ஹிட்டான 'ஜெர்ஸி' படத்தின் தமிழ் ரீமேக்கை ராணா தயாரிக்க, அதிலும் ஹீரோவாக நடிக்க விஷ்ணு விஷாலிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தன் பிறந்தநாளை முன்னிட்டு இன்று தன் அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 'ஃபைசல் இப்ராஹிம் ரயீஸ் (FIR)' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை இயக்குநர் கெளதம் மேனனிடம் உதவி இயக்குநராக இருந்த மனு ஆனந்த் இயக்குகிறார். விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். தீவிரவாதத்தை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தின் மோஷன் போஸ்டரை இசையமைப்பாளர் அனிருத் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment