கடும் மழையால் வீடுகளில் வெள்ளம் பலர் பாதிப்பு

ஹற்றன் பன்மூர் தோட்டத்தில் பெய்த கடும் மழை காரணமாக   13 குடும்பங்களைச் சேர்ந்த 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதன்போது பாதிக்கப்பட்டவர்கள் சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன், இவர்களுக்கு அம்பகமுவ பிரதேச செயலகத்தின் இடர் முகாமைத்துவ நிலையத்தினால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

மலையகத்தின் நீரேந்தும் பிரதேசங்களில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதனால்  குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் கணிசமான அளவில் உயர்ந்துள்ளதுடன், பன்மூர் குளத்தின் அணைக்கட்டின் கீழ் பகுதியில் நீர் பெருக்கெடுத்தது.

இதன் காரணமாக  வீடுகளில் வெள்ளநீர் பாய்ந்துள்ளது.

இதேவேளை, பன்மூர் குளத்தின் அணைக்கட்டு உறுதியற்ற நிலையில் காணப்படுவதாகவும், எந்த வேளையிலும் உடைந்து விழும் ஆபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக பிரதேச வாசிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

தற்போது மலையகத்தில் ஏற்பட்டுள்ள மழையுடனான காலநிலை நீடிக்குமானால் இந்த குளத்தின் நீர் அதிகரித்து அணைக்கட்டு உடைவதுடன், பன்மூர், அலுத்கம, டிக்கோயா ஆகிய பகுதிகளில் பல வீடுகள் நீரில் மூழ்கும் ஆபத்து ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.















Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment