2019 ம் ஆண்டு நடைபெற்ற வடமாகாண தடகள போட்டியில் 16 வயதிற்கு உட்பட்ட பிரிவில் பங்கு பற்றி தட்டெறிதல் போட்டியில் யாழ் வைதீஸ்வராக் கல்லூரி மாணவன் க.ஜெசின் முதன் முதலாக தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். இதுவே அவர் வடமாகாண ரீதியில் தட்டெறிதல் போட்டியில் பெற்றுக் கொண்ட முதல் தங்கப்பதக்கம் ஆகும்.
மற்றும் குண்டுபோடுதல் போட்டியில் 5 ம் இடத்தினையும் பெற்றுக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவருக்கான பயிற்சிகளை பயிற்றுவிப்பாளர் உ.வினோத்குமார் , மதியழகன் மற்றும் சிவபாலன் ஆசிரியர்கள் வழங்கினார்கள்.
0 comments:
Post a Comment