சில ஆண்டுகளுக்கு முன், கவுண்டமணி, சந்தானம் ஆகியோருக்கு, தமிழ் சினிமாவில் எப்படி கிராக்கி நிலவியதோ, அதேபோன்ற கிராக்கி, இப்போது, யோகி பாபுவுக்கு ஏற்பட்டுள்ளது.
கவுண்டமணியும், சந்தான மும், படம் முழுவதும், ஹீரோவுக்கு இணையான காட்சிகளில் வருவர்; பாடல் காட்சிகளும், இதற்கு விதி விலக்கு இல்லை. அதேபோல், இப்போது, யோகி பாபுவும், பெரும்பாலான படங்களில், ஹீரோவுக்கு இணையான காட்சிகளில் நடிக்கிறார். விக்ரம் பிரபு ஹீரோவாக நடிக்கும், அசுர குரு படத்திலும், இவருக்கு நல்ல கேரக்டராம்.
இதில், மஹிமா நம்பியார், ஹீரோயினாக நடிக்கிறார். 'சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைப்பதே, பெரிய விஷயம். கிடைத்த வாய்ப்பை, சரியாக பயன்படுத்துவது தானே, புத்திசாலித்தனமான விஷயம்' என்கிறது, யோகி பாபு தரப்பு.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment