யோகிபாவுவின் காதலி

யோகிபாபுவுக்கு, காதலியாக வலம் வருகிறார் அஞ்சலி. இந்தப் படத்தை 
கிருஷ்ண ஜெயராஜ் இயக்க கே.எஸ்.சினிஷ் தயாரிக்கிறார். 

படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. படம் குறித்து இயக்குநர் கிருஷ்ண ஜெயராஜ் கூறியதாவது,

யோகி பாபுவும் அவரது நண்பர்களும் ஒரே பெண்ணை, ஒரு தலையாய் காதலிக்கும்  கதையாக அமைந்திருக்கிறது. அந்த பெண் கேரக்டரில் நடிக்க அஞ்சலி தகுதியானவர் என்ற நம்பிக்கை இருந்தது.

ஆனாலும் இந்த படத்தில் நடிக்க அஞ்சலி ஒப்புக் கொள்வாரா? என்பது எங்களுக்கு சந்தேகம் இருந்தது. எங்களை ஆச்சரியப்படுத்தும் விதமாக, நான் அவருக்கு கதையை சொன்னபோது, கதையை இரசித்தார். 

இந்த படத்தில் நடிக்கிறேன் என்று ஒப்புக்கொண்டு எங்களை அதிர்ச்சி அடைய வைத்தார் அஞ்சலி. 

அண்மைக் காலங்களில் யோகிபாபு பல திரைப்படங்களில் நடித்து வருகிறார், அவரே முன்னணி கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். ஆனாலும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில், முழு படத்திலும் தோன்றுவார். 

அதே போல, அஞ்சலி மற்றும் யோகி பாபு ஆகியோருடன் விஜய் டிவி புகழ் ராமரும் முழு படத்தில் இருப்பார். முக்கியமான வேடங்களில் நடிக்க இன்னும் சில முக்கிய நடிகர்களுடன் பேச்சு நடந்து வருகிறது-என்றார்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment