அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் அரசிற்கு ஆதரவாக வாக்களிக்கும் முன்னர், வடக்கு- கிழக்கிலுள்ள தமிழர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வலியுறுத்தினார்.
யாழில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், “அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு வாக்களிக்க முன்னர், வடக்கு கிழக்கில் பெளத்த கோயில்கள் அமைக்கப்பட்டு காணிகள் அபகரிக்கப்பட்டு வரும் திட்டத்தை நிறுத்துமாறு கூட்டமைப்பு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்க வேண்டும்.
மேலும் காணிகள் விடுவிக்கப்பட வேண்டுமென்றும் அவர்கள் குறைந்தபட்ச கோரிக்கைகளை முன்வைத்து அதனை அரசாங்கம் நிறைவேற்றுமென்ற உறுதிமொழிகளைப் பெற்று அதன் பின்னர் வாக்களிக்க வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment