ஈஸ்டர் தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட பயங்கரவாத அமைப்பு தற்போது இலங்கையில் அழிக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
எனவே, தேசிய பாதுகாப்பு குறித்து எவ்வித பிரச்சினையும் இல்லை என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
பொலன்னறுவையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் எந்தவொரு காலத்திலும் இல்லாத வகையில் நாட்டில் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்த கடந்த நான்கரை வருட காலப்பகுதியில் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் அமைதியான சூழல் ஒன்று கட்டியெழுப்பப்பட்டுள்ள நிலைமைகளுக்கு மத்தியில் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் நாட்டின் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களை துரிதமாகவும் பலமாகவும் முன்னெடுப்பதே இன்று நாட்டில் உள்ள அனைவரதும் பொறுப்பாகும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
0 comments:
Post a Comment