வெற்றிகொள்வதற்கு மேலும் பல சவால்கள் தம் முன்னே உள்ளதாகவும், ஒன்றாக நின்று நாட்டைப் பற்றி சிந்தித்து அவற்றை வெற்றி கொள்ள முயற்சிக்க வேண்டும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
விசேட அறிக்கையொன்றை விடுத்து ஊடகங்களிடம் நேற்றுக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் கூறியுள்ளார்.
கடந்த ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலின் பின்னர் நாட்டின் சகல நடவடிக்கைகளும் ஓரிடத்தில் முடங்கும் என சிலர் எதிர்பார்த்தனர். ஆனால் நாங்கள் அதற்கு இடமளிக்கவில்லை. எங்கள் அரசாங்கம் பொருளாதாரம், சமூக, அபிவிருத்தி நடவடிக்கைகளை தடையின்றி முன்னெடுத்து செல்கின்றது.
சமுர்த்தியை பெற்றுக் கொடுத்துள்ளோம், காணிகளை பெற்றுக் கொடுத்துள்ளோம், தொழில்வாய்ப்புகள், வீட்டு வசதிகளையும் வழங்கியுள்ளோம், முடங்கிப் போன சுற்றுலாத்துறையை மீளக்கட்டியெழுப்புவதற்கு செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளோம் எனவும் கூறியுள்ள பிரதமர், அரசாங்கத்தின் முன்நோக்கிய பயணத்திற்கு எந்த தடையும் ஏற்படுவதற்கு நாம் இடமளிக்கவில்லையெனவும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment