தமிழகத்தில் நடந்த தபால்துறை தேர்வில் தமிழை அனுமதிக்காததை கண்டித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போதான விவாதத்தில் அதிமுக- திமுக இடையே காரசார விவாதம் நடந்தது. பின் திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு, அண்மையில் நடந்த தபால்துறை தேர்வில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன.
தமிழை தேர்வில் கடைசி நேரத்தில் அனுமதிக்கவில்லை. இதுகுறித்து சபையில் விவாதிக்க வேண்டுமென கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.
இதில் அதிமுக சார்பில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ''லோக்சபாவில் உள்ள திமுக உறுப்பினர்கள் 37 பேரும் இதுகுறித்து அங்கு குரல் எழுப்ப வேண்டும்,'' என்றார்.
பதிலளித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ''திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பை நோக்கமாக கொண்டு, இதுபோன்ற பிரச்னைகளை எழுப்புகின்றனர். லோக்சபாவில் இப்பிரச்னை குறித்து மத்திய அரசு பதிலளித்த பின்னர்தான் தமிழக அரசு இது குறித்து நிலை எடுக்க முடியும்,''என்றார்.
0 comments:
Post a Comment