பாதுகாப்பு படைகளின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளில் 27.5 ஏக்கர் காணிகள் பொது மக்களுக்கு மீண்டும் கையளிக்கும் நிகழ்வு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் நேற்று தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
யாழ். வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் யுத்தகாலத்தில் பாதுகாப்புப் படையினரால் கையகப்படுத்தப்பட்ட பொதுமக்களின் காணிகளே மீண்டும் அவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை யாழ். மாவட்டத்தில் பாதுகாப்பு படைகளின் வசமிருந்த காணிகளில் 2,963 ஏக்கர் காணிகள் பொதுமக்களிடம் மீண்டும் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment