நீண்ட நாள்களின் பின்னர் முல்லைத்தீவு மாவட்டத்தில் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரு மகிழ்ச்சியில் உள்ளனர்.
அண்மைக் காலமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவிவந்த கடும் வரட்சி காரணமாக மக்கள் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்திருந்தனர்.
வரட்சி காரணமாக நீர் நிலைகள் வற்றியதோடு விவசாயிகளும் பாதிக்கப்பட்டிருந்தனர். கால்நடைகள் நீரின்றி பல்வேறு சிரமங்களுக்கும் முகம்கொடுத்தனர்.
இந்த நிலையில் நேற்றும் இன்றும் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல இடங்களிலும் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது.
0 comments:
Post a Comment