பிக்பாஸ் போட்டியாளரான லாஸ்லியா, புதிய படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
பிக்பாஸ் சீசன் 3யில் மக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ள போட்டியாளர் லாஸ்லியா தான். இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணான லாஸ்லியா, அங்கு செய்தி வாசிப்பாளராக இருந்தவர்.
தினமும் காலையில் நடனம் ஆடுவதைத் தவிர, பிக்பாஸ் வீட்டில் பெரும்பாலும் அவர் பிரச்சினைகளில் எதிலும் பெரிதாக சிக்கவில்லை. ஆனால், அவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆரம்பித்த நாளன்றே சமூகவலைதளங்களில் அவருக்கான ஆர்மி தொடங்கப்பட்டு விட்டது. அவருக்கென்று தனி ரசிகர் வட்டமும் உருவாகி விட்டது.
அவருக்கு தமிழ் படத்தில் நாயகியாகும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக திரையுலகப் பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். நிச்சயம் தமிழில் அவர் ஒரு ரவுண்ட் வருவார் என ரசிகர்களும் நம்புகின்றனர்.
இந்நிலையில், புதிய படமொன்றில் லாஸ்லியாவை நாயகியாக நடிக்க வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நல்ல கதையம்சம் உள்ள படங்களாகத் தேர்வு செய்து நடித்து வரும் அருள்நிதி படத்தில் தான் அவர் நாயகியாக அறிமுகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்ததும், படப்பிடிப்பு ஆரம்பமாகும் எனத் தெரிகிறது. விரைவில் இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment