இலங்கை -பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நேற்று (26) நடைபெற்ற ஒரு நாள் சர்வதேச போட்டியுடன் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க தனது 15 வருடகால சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற்றுச் சென்றார்.
2004 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் உலகில் கால்பதித்த லசித் மலிங்க இதுவரை 226 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 338 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.
இலங்கை அணி சார்பில் தனது இறுதிப் போட்டியில் விளையாடிய லசித் மாலிங்க பங்களாதேஷ் அணியின் 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment