அமெரிக்காவில் தனது விளம்பரத்தை கூகுள் நிறுவனம் முடக்கியதாகக் கூறி ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராகப் போட்டியிடும் துளசி கப்பார்ட் கருத்து தெரிவித்துள்ளார்.
அதிபர் வேட்பாளருக்கு ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடுவோரில் பலரும் கூகுள் நிறுவனத்தில் விளம்பரம் கொடுத்துள்ளனர். அவர்களுக்கிடையே விவாதம் நடத்தப்பட்டு, ஒவ்வொருவருக்கும் நிதி திரட்டப்படும்.
அந்த வகையில் தனது பிரச்சார விளம்பரத்தை முக்கிய தருணமான ஜூன் 27 மற்றும் 28-ம் தேதிகளில் 6 மணி நேரம் முடக்கியதாக கூகுள் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ள துளசி கப்பார்ட் இதனால் தனக்கு ஏற்பட்ட 5 கோடி டாலர் நிதி திரட்டலை தடுத்ததாகவும், அந்த இழப்பீட்டை கூகுள் வழங்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.
அசாதாரணமான செயல்கள் இடையூறு செய்யும் போது விளம்பரங்கள் தானியங்கி முறையில் தடுக்கப்படும் எனவும், கவனம் பெற்ற 30 நிமிடங்களில் சரிசெய்துவிட்டதாகவும் கூறியுள்ள கூகுள் எந்தக் கட்சிக்கும் ஆதரவாக செயல்படவில்லை என விளக்கமளித்துள்ளது.
தேடுபொறியில் ஆதிக்கம் செலுத்தும் கூகுள் நிறுவனம், ஆட்சி அமைப்பில் கூட தாக்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்படுவது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல என துளசி கப்பார்ட் குற்றம் சாட்டியுள்ளார்.
0 comments:
Post a Comment