ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே நேற்று முன்தினம் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை சஜியான் மற்றும் மெந்தார் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது.
எல்லையோர கிராமங்களை குறிவைத்து மார்டர், சிறிய ரக ஆயுதங்கள் மூலம் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் பல வீடுகள் சேதமடைந்தன. இதற்கு இந்திய ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தியது.
பாகிஸ்தான் துப்பாக்கிச்சூட்டில் முகமது ஆரிப் (40) என்பவர் காயமடைந்தார். மேலும் பிறந்து 10 நாட்களே ஆன பச்சிளங் குழந்தை, மற்றும் அதன் தாயார் பாத்திமா ஜான் (35) ஆகியோர் காயமடைந்தனர்.
மூன்று பேரும் பூஞ்ச் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பச்சிளம் குழந்தை நேற்று உயிரிழந்தது. மேலும் காயமடைந்த இருவரும் ஜம்மு அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment