குஜராத் அக்சர்தாம் கோயில் தாக்குதலில் ஈடுபட்டு காஷ்மீரில் கைது செய்யப்பட்ட முக்கியக் குற்றவாளி தனி விமானம் மூலம் குஜராத் அழைத்து வரப்பட்டார்.
யாசின் பட் எனப்படும் அந்தத் தீவிரவாதியை கடந்த 3 ஆண்டுகளாகத் தேடி வந்ததாக குஜராத் மாநில தீவிரவாதத் தடுப்புப் படையினர் தெரிவித்தனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள யாசின் பட்டை தனி விமானம் மூலம் அகமதாபாத் அழைத்து வந்த தீவிரவாதத் தடுப்புப் படையினர், அவரை குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
முன்னதாக காந்திநகரில் உள்ள அக்சர்தாம் கோயிலில் கடந்த 2002ம் ஆண்டு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதுடன் 80 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
0 comments:
Post a Comment