வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜயசுந்தரவிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ள குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கோட்டை நீதவான் நீதிமன்றால் குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுவெடிப்பு தாக்குதலை தடுக்க தவறிய குற்றத்தின் அடிப்படையில் இவர் கடந்த செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையிலேயே அவரிடம் வாக்குமூலம் பெற்றுகொள்ள குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment