மூடி மறைக்க வேண்டிய எந்தவொன்றும் இல்லையெனவும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து தான் ஜனாதிபதியும் பிரதமரும் வருவார்கள் என்பது உறுதியான கருத்தாகும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
நேற்று ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
கூட்டணி அமைக்க வரும் எந்தவொரு கட்சியும் இதற்கு எதிராக நிபந்தனை விதிக்க முடியாது. தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ எனவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ எனவும் தீர்மானமாகி விட்டது. இந்த நாட்டில் செல்வாக்குள்ள ஒரே மனிதர் மஹிந்த ராஜபக்ஸ மாத்திரமே. அவரது தீர்மானம் இதுவாகத்தான் உள்ளது எனவும் அவர் மேலும் கூறினார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி 6 கட்ட பேச்சுவார்த்தை நிறைவடைந்த நிலையில் இவ்வாறான கருத்து மேலும் பகிரங்க மேடைக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment