சம்மாந்துறை பிரதேசத்தில் ஆயுதம் தாங்கிய மர்ம நபர்களால் பதட்டம் இராணுவத்தினர் குவிப்பு.
சொந்தக் காணிக்குச் சென்றவரைத் துப்பாக்கியால் சுட முயற்சித்த சம்பவம் ஒன்று அம்பாறை மாவட்டத்தில் நடந்துள்ளது.
சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்மாந்துறை 12 கருவாட்டுக் கல் எனும் பிரதேசக் காணி ஒன்றில், ஆயுதம் தாங்கிய மர்ம நபர்கள் இருவர் அங்கு உலாவிக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் தான் காணிக்குள் சென்றவளை 56 ரக துப்பாக்கி எடுத்து தன்னைச் சுட முற்பட்டதாக காணிக்குச் சொந்தமானவர் தெரிவித்தார்.
இதனையடுத்து அருகிலுள்ள இராணுவத்தினருக்கு தெரியப்படுத்திய வேளை இராணுவத்தினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய ஆயுததாரிகள் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனைத் தொடர்ந்து பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டு குறித்த பிரதேசத்தில் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. எனினும் எந்தவித ஆயுதமும் அதிகாரிகளும் கைது செய்யப்படவில்லை.
0 comments:
Post a Comment