நீர்வேலி அத்தியார் இந்து கல்லூரிக்கு அண்மையாக பருத்தித்துறை வீதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த ஆசிரியரொருவரின் தங்கச் சங்கிலி அறுக்கப்பட்டுள்ளது.
மேற்படி துணிகர சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது சம்பவத்தினால் ஆசிரியர் திருடர்களின் தாக்குதலால் காயமடைந்துள்ளார்.
மேற்படி சம்பவம் பற்றி தெரியவருவதாவது,நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் கற்பிக்கும் ஆசிரியை பாடசாலை முடிவடைந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அவரை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த இருவர் ஆசிரியையின் தங்கச் சங்கிலியை அறுத்ததுடன் காலால் மோட்டார் சைக்கிளை உதைத்துள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்து சரிந்து வீழ்ந்ததால் ஆசிரியர் காயத்துக்குள்ளாகியுள்ளார். அச்சமயம் வீதியிலுள்ளவர்கள் ஓடிச் சென்று ஆசிரியை தூக்கி விட்டுள்ளனர்.முகத்தை மறைக்கும் தலைக்கவசத்துடன் வந்ததால் திருடர்களை அடையாளம் காண முடியவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment