போதைப் பொருள் வர்த்தகர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான திகதி மற்றும் நேரம் இதுவரையில் ஜனாதிபதியால் அறிவிக்கப்படவில்லை.
இவ்வாறு மேன்முறையீட்டு நீதிமன்றில் அறிவித்துள்ளார் சிறைச்சாலை ஆணையாளர் T.M.W தென்னக்கோன்.
போதைப் பொருள் வர்த்தகர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி தீர்மானம் மேற்கொண்டுள்ளார்.
இந்தத் தீர்மானத்தை இரத்துச் செய்யுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேலதிக ஆய்வின் போதே சிறைச்சாலைகள் ஆணையாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment