முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்தால், நிபந்தனைகளுடனேயே ஆதரிப்போமென நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் குறித்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். டிலான் மேலும் கூறியுள்ளதாவது, “ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக எதிர்த்தரப்பு சார்பில் யார் களமிறங்கினாலும் அவரை ஆதரிக்க வேண்டிய சூழ்நிலையில் நாம் தற்போது உள்ளோம்.
ஜனாதிபதி தேர்தல் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. எதிரணியில் யார் வேட்பாளர் என்பது குறித்து இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.
அந்தவகையில் எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ இல்லாவிடின் சிறப்பாக இருக்கும். மாறாக அவரையே ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்தால் ஆதரிக்க வேண்டிய நிலைமையே தற்போது காணப்படுகின்றது.
தேசிய பிரச்சினை குறித்து அவரின் நிலைப்பாட்டை முதலில் அறிந்து கொண்ட பின்னர், நிபந்தனைகளின் அடிப்படையில் கோட்டாவை நாம் ஆதரிப்போம்” என டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment