மரண தண்டனையை நீக்கும் சட்டமூலத்தை விரைவில் நாடாளுமன்ற விவாதத்திற்கு எடுத்துகொள்ள உள்ளதுடன் சட்டமாக நிறைவேற்றுவோமென அமைச்சர் லக்ஷ்ன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
கடந்த நாடாளுமன்ற அமர்வில் கொண்டுவரப்பட்டுள்ள மரண தண்டனையை நீக்கும் தனிநபர் பிரேரணை குறித்து நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். லக்ஷ்ன் கிரியெல்ல மேலும் கூறியுள்ளதாவது, “மரணத்தண்டனை வழங்கக்கூடாதென்பது நீண்டகாலமாக இருக்கும் நிலைப்பாடாகும்.
ஆனால் ஜனாதிபதி மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டுமென்ற உறுதிப்பாட்டில் உள்ளார்.
ஆனால் ஜனாதிபதியின் அணியாக இருக்கும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, ஏனைய அரசியல் கட்சிகள் மற்றும் அரசாங்கம் என அனைவரும் எதிர்க்கின்றோம்.
இவ்வாறு அனைவரும் எதிர்ப்பை வெளிப்படுத்தும்போது, ஜனாதிபதி மாத்திரமே மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டுமென கூறி வருகின்றார்.
இதனை ஆரோக்கியமான விடயமாக ஒருபோதும் கருதமுடியாது. ஆகவே மிக விரைவில் மரண தண்டனையை நீக்கும் சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படும்” என லக்ஷ்ன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment