மாநிலங்களவைத் தேர்தலுக்காக ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தாக்கல் செய்த மனு ஏற்கப்பட்டுள்ளதால் அவர் நாடாளுமன்ற உறுப்பினராவது உறுதியாகியுள்ளது.
மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் மனுக்கள் இன்று பரிசீலனை செய்யப்பட்டன. அதில் வைகோ, தி.மு.க.வேட்பாளர்களான சண்முகம், வில்சன் ஆகியோரின் வேட்பு மனுக்களும் ஏற்கப்பட்டுள்ளன.
தேசத்துரோக வழக்கில் தண்டனை பெற்று பிணையிலுள்ள வைகோவுக்கு, இந்த தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல் ஏற்படும் எனவும் அவரது மனு நிராகரிக்கப்படலாம் எனவும் பரவலாக பேசப்பட்டது.
இதனால் மாற்று ஏற்பாடாக, தி.மு.க சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, நேற்று வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையிலுயே வைகோவின் மனு, இன்று ஏற்கப்பட்டுள்ளமையினால் வைகோ மாநிலங்களவை உறுப்பினர் ஆவதில் சிக்கல் இல்லையென்பது உறுதியாகியுள்ளது.
0 comments:
Post a Comment