ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவிற்கு எதிராக தேச துரோக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதை அடுத்து அவர் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல் நிலை நிலவுவதாக அரசியல் ஆய்வலர்கள் விமர்சித்திருந்தனர்.
இந்நிலையில் அவர் தேர்தலில் போட்டியிடுவதில் தடையில்லை என சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சட்டநிபுணர்கள், உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி பதவியில் இருக்கும் ஒருவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டால் பதவி இழப்பார். ஆனால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கு குறைவாக தண்டனை வழங்கப்பட்டால், அவர் தேர்தலில போட்டியிட தடையில்லை என குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் இந்த விவகாரம் குறித்து தேர்தல் ஆணையத்திடமும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
இது குறித்து விளக்கமளித்துள்ள தேர்தல் ஆணையம், வைகோவுக்கு வழங்கப்பட்ட தண்டனையானது, தேச துரோக சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது.
இந்த சட்டம் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் அதாவது தகுதி நீக்க சட்டத்தில் இணைக்கப்படவில்லை.
மேலும் வைகோவுக்கு ஓராண்டு மட்டுமே சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எனவே அவர் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடலாம் என குறிப்பிட்டுள்ளனர்.
நான் குற்றம்சாட்டுகிறேன்’ என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய வைகோ, மத்திய அரசுக்கு எதிராகவும், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும் உரையாற்றியிருந்தார்.
இதற்கு எதிராக வைகோவிற்கு ஒரு வருட சிறை தண்டனையும், 10 ஆயிர ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment