1991ம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படம், ‛என் ராசாவின் மனசிலே. கஸ்தூரிராஜா இயக்கிய இந்தப் படத்தில் ராஜ்கிரணும், மீனாவும் ஜோடியாக நடித்திருந்தனர். இந்தபடம் தான் இருவருக்குமே மிகப்பெரிய பிரேக் கொடுத்தது. பின் பாசமுள்ள பாண்டியரே என்ற படத்தில் நடித்தனர். அதன் பிறகு ராஜ்கிரணும், மீனாவும் இணைந்து நடிக்கவில்லை.
ராஜ்கிரண் பின்பு ஹீரோவாகவும், தற்போது குணசித்ர வேடங்களிலும் நடித்து வருகிறார். மீனா, ரஜினி ஜோடியாக நடித்து விட்டார். தற்போது மலையாள படங்களில் குணசித்ர வேடத்தில் நடித்து வருகிறார்.
தற்போது ராஜ்கிரணும், மீனாவும் மீண்டும் நடிக்கிறார்கள். தமிழ் படத்தில் அல்ல... மலையாளப் படத்தில். மம்முட்டி நடிக்கும் ஷைலாக் என்ற படத்தில் நடிக்கிறார்கள். இதனை ராஜாதிராஜா, மாஸ்டர் பீஸ் படங்களை இயக்கிய அஜய் வாசுதேவ் இயக்குகிறார். இதன் தொடக்க விழா கொச்சியில் நடந்தது. இதில் ராஜ்கிரணும், மீனாவும் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment