சட்டவிரோத சிக்கரெட்டுக்களுடன் ஒருவர் கைது

டுபாய் நாட்டில் தயாரிக்கப்பட்ட சிக்கரெட்டுக்களை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவந்த நபரொருவர் கட்டுநாயக்க விமானநிலைய சுங்க அதிகாரிகளால் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
குருநாகல் ரிதிகம பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் மேலதிக சுங்க திணைக்கள பணிப்பாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட நபர் எமிரேட்ஸ் E.K. 652 என்ற விமானம் மூலம் நேற்று மாலை 6.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையம் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபரின் பயணப்பொதியிலிருந்து 1,386,000 ரூபா பெறுமதியான 27,720 வெளிநாட்டு சிக்கரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்க திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment