இஸ்லாம் பயங்கரவாதத்துடன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஒப்பிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்து வெளியிடுவது, கண்டனத்துக்குரிய விடயமென வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் ஐங்கரநேசன் குறிப்பிட்டார்.
யாழில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், “இஸ்லாம் பயங்கரவாதத்துடன் போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு தொடர்புள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார். அதில் உண்மை இருக்க வாய்ப்புள்ளது. ஏனெனில், ஈஸ்டர் தா்குதல்கள் சர்வதேச பயங்கரவாத தாக்குதலாகும்.
ஆனால் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தலைமையில் இடம்பெற்ற போராட்டம் விடுதலைப் போராட்டமாகும். மக்களின் பங்கேற்புடன் கூடிய போராட்டமாகும். இது எல்லோரும் அறிந்த உண்மை. இவ்வாறிருக்க பிரபாகரனுக்கு எதிரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்து கண்டிக்கத்தக்கது” என மேலும் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment