ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் தலைவர் ரவுப் ஹக்கீம் மாத்திரமே அமைச்சுப் பதவியை நேற்று ஜனாதிபதியிடம் பெற்றுக் கொண்டதாகவும், ஏனைய அமைச்சர்களாக இருந்த தான் உட்பட அலிசாஹிர் மௌலானா, ஹரீஸ் ஆகிய மூவரும் கல்முனைப் பிரச்சினைக்கான அரசாங்கத்தின் தீர்வின் பின்னர் பதவியேற்கவுள்ளதாகவும் ஸ்ரீ ல.மு.காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் பைஸல் காஸிம் தெரிவித்தார்.
கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை பிரதான பிரதேச செயலகமாக தரமுயர்த்த அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்துக்கு எதிர்ப்பைத் தெரிவித்தே தாங்கள் அமைச்சுப் பதவியை பொறுப்பேற்பதை ஒத்தி வைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இப்பிரச்சினை தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சரான வஜிர அபேவர்தனவுடன் நேற்றிரவு பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளதாக தெரிவித்த அவர், தமது மகஜரையும் அமைச்சரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் கூறினார். குறித்த பிரச்சினை தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடனும் பேசி தீர்வு காண்பதாக அமைச்சர் கூறியதாகவும் பைஸல் காஸிம் எம்.பி. மேலும் குறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment