மருத்துவ சிகிச்சையை முடித்துக் கொண்டு சிங்கப்பூரிலிருந்து முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ நேற்று (23) இரவு 11.45 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிங்கப்பூர் விமான சேவைக்குச் சொந்தமான எஸ்.கியு 468 எனும் இலக்க விமானத்தில் அவர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இவரை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக களமிறக்க வேண்டும் என சில தரப்புக்களினால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு அழுத்தங்கள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment