அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் தமது கட்சியைச் சேர்ந்தவர்கள் எந்தவொரு அமைச்சுப் பதவியையும் எடுக்காதிருப்பதற்கு கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானித்துள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தீர்மானங்கள் குறித்து இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து விளக்கமளிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பிரதமரைச் சந்திப்பதற்கு முன்னர், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து விரிவான கலந்துரையாடல் ஒன்றை முன்வைக்கவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment