வெட்டி கொல்லப்பட்ட விவசாயி

கோவில் திருவிழாவில் முதல் மரியாதை அளிக்காத காரணத்தால் விவசாயி ஒருவர் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டிருப்பது, மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
நம் சமூகம் எவ்வளவு முன்னேற்றத்தை நோக்கி சென்றாலும் இன்னும் கிராமப்புறங்களில் பழமை மாறாத பல விஷயங்கள் தொடர்ந்து கொண்டு தான் உள்ளது இதில் ஒரு சில நன்மை பயக்கும் விஷயங்கள் இருந்தாலும் முன்விரோதத்தை வளர்க்க கூடிய விஷயங்களும் அடங்கியுள்ளது வேதனையை ஏற்படுத்துகிறது மதுரை மாவட்டம் சிலைமான் அருகே இளமனூர் பகுதியைச் சேர்ந்த காஞ்சிவனம் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். 
இந்த நிலையில் இளமனூர் பகுதியில் உள்ள கோவில் திருவிழாவின் போது குறிப்பிட்ட ஒரு சமூகத்தை சேர்ந்த ஒரு தரப்பினருக்கு முதல் மரியாதை வழங்குவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது வாக்குவாதம் முற்றி கைகலப்பு வரை போனது பின்னர் ஊரார் சமாதானப்படுத்தி இரு தரப்பினரையும் அனுப்பி வைத்தனர் இதனிடையே தங்களுக்கு முதல் மரியாதை தரப்படாததற்கு வேறு ஒரு சமூகத்தை சேர்ந்த விவசாயி காஞ்சிவனம் தான் காரணம் என மற்றொரு தரப்பினர் ஆத்திரத்தில் இருந்தனர் இந்நிலையில் குறிப்பிட்ட ஒரு தரப்பினர் வீட்டு வாசலில் வைத்து விவசாயி காஞ்சிவனத்தை ஓட ஓட விரட்டி அரிவாளால் சராமரியாக வெட்டி படுகொலை செய்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிலைமான் காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய தேவேந்திரன் உட்பட நான்கு பேரை போலீசார் தேடி வருகிறார்கள். 
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment