ஜனாதிபதி திரும்பியுள்ளார்- முஜிபுர் ரஹ்மான்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த அரசாங்கத்துக்கு முற்றிலும் எதிராக போக்கிலேயே செயற்படுகின்றார் என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான கூறியுள்ளார்.
கொழும்பில் நேற்று  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
கடந்த 2015 ஜனவரி 08 முதல் ஓக்டோபர் 26 இல் அரசாங்கத்தை திடீரென மாற்றும் நேரம் வரை அரசாங்கத்துடன் இருந்த ஜனாதிபதி, தற்பொழுது 360 பாகை அரசாங்கத்துக்கு எதிராக திரும்பியுள்ளார்.
அவர் இந்த அரசாங்கத்துக்கு விருப்பமில்லை. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் விருப்பமில்லை. இந்த அரசாங்கத்துடன் பணியாற்ற முடியாது என்ற நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதி காணப்படுகின்றார். ஜனாதிபதி ஒவ்வொரு விடயத்தையும் கூறுவதற்கு ஆரம்பித்துள்ளார். இறுதியாக 19 ஆம் திருத்தச் சட்டத்தை மாற்ற வேண்டும் என கூறியுள்ளார்.
19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக ஜனநாயகம் பலம்பெற்றது. சுயாதீன் ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டன. ஜனாதிபதியின் அதிகாரம் குறைக்கப்பட்டது. ஜனாதிபதி இந்த சட்டத்தை மாற்றுவதன் ஊடாக கடந்த மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தின் தன்மைக்கே இட்டுச் செல்லப் பார்க்கின்றார். இதற்கு ஒரு போதும் இடமளிக்க  மாட்டோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.  
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment