கோவா மாநில காங்., எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் நேற்று அகட்சியில் இருந்து விலகினர். இன்று பா.ஜ. தேசிய தலைவர் அமித்ஷாவை சந்தித்து அக்கட்சியில் இணைகின்றனர்.
கோவா முதலவராக இருந்த பா.ஜ.வைச் சேர்ந்த மனோகர் பாரீக்கர் மறைவையடுத்து புதிய முதல் மந்திரியாக பிரமோத் சாவந்த் பதவியேற்றார். மனோகர் பாரீக்கர் மறைவால் சட்டசபையில் ஆளும்கட்சியின் பலம் குறைந்துள்ள நிலையில் ஆட்சி அமைக்க தங்களை அழைக்க வேண்டும் என 14 காங். எம்.எல்.ஏ.க்கள் கவர்னர் மிருதுளா சின்ஹாவை சந்தித்து கடிதம் அளித்திருந்தனர்.
இதுதொடர்பாக, கோவா சட்டசபையில் கடந்த மார்ச்சில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மை ஆதரவுடன் பிரமோத் சாவந்த் அரசு வெற்றி பெற்றது.இந்நிலையில், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சந்திரகாந்த் கவ்லேகர் உள்பட காங். கட்சி எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் நேற்று இரவு சட்டசபை சபாநாயகர் ராஜேஷ் பட்னேக்கரை சந்தித்து. பா.ஜ.வில் இணைவதாக கடிதம் கொடுத்தனர். தொடர்ந்து அவர்கள் நேற்று இரவே டில்லி சென்று பா.ஜ. தேசிய தலைவர் அமித்ஷா, செயல் தலைவர் ஜெ.பி. நட்டா ஆகியோர் முன்னிலையில் இன்று பா..ஜ.வில் இணைகின்றனர்.
0 comments:
Post a Comment