கல்முனை சாய்ந்தமருது வொலிவேரியன் கிராமத்தில் தற்கொலை குண்டுத்தாக்குதலில் சேதமடைந்த வீட்டை புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதற்காக கல்முனை இராணுவ படை முகாம் கட்டளை தளபதிகள் தலைமையிலான இராணுவ அணி இன்று குறித்த பகுதிக்குச் சென்று நிலைமைகளை ஆராய்ந்துள்ளனர்.
அங்கு சென்ற இராணுவத்தினர் சேதமடைந்த வீட்டின் பகுதிகளை ஒளிப்படம் எடுத்தததோடு , அதனை மீள புனரமைப்பதற்கான உத்தேச வரைவு ஒன்றினையும் செயற்படுத்தி துரித கதியில் பழைய நிலைக்கு அவ்வீட்டை திருத்தி அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த வீட்டை இராணுவத்தினர் திருத்தியமைக்க முன்வந்துள்ளமை தொடர்பாக அப்பகுதி மக்கள் இராணுவத்தினரை பாராட்டியுள்ளனர்.
இதேவேளை கடந்த ஏப்ரல் 26ஆம் திகதி சஹ்ரானின் குடும்பத்தினர் தற்கொலை தாக்குதல் மேற்கொண்டதில் குறித்த வீட்டில் குடுப்ப உறுப்பினர்கள் உட்பட 15 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment