இலங்கையில், நவ ரத்தினங்களில் ஒன்றான 332 கேரட் எடை கொண்ட நீல நிற கல் பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
டையஷ் ஜிவல்லரி நிறுவனத்துக்கு சொந்தமான இந்த நீலக்கல், தங்கத்தில் செய்த கிரீடத்தின் உச்சியில் பதிக்கப்பட்டுள்ளது. ப்ளூ சாப்பைர்ஸ் என்றழைக்கப்படும் இந்த நீலக் கல்லானது, 17 கோடி ரூபாய்க்கு அதிகமான தொகைக்கு விலை போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது இந்த நீலக்கல் இலங்கையில் உள்ள கண்டி (Kandy) நகரில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் டையஷ் ஜூவல்லரி நிறுவனத்தின் இயக்குனர் அயேஷ் டீ போன்சேகா என்பவர், இதுபோல் மேலும் பல வித நவரத்தின கற்கள் வங்கி லாக்கர் மற்றும் அருங்காட்சியங்களில் வைத்து பாதுகாத்து வருவதாக தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment