இந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டதால், கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் வடகிழக்கில் உள்ள சுலவேசி தீவில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவு ஆனதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுலவேசி தீவுக் கடலில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கும் ஏற்பட்டதாக இந்தோனேசிய புவி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment